

ரியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர்களின் மோசமான செயல் பாடுகளுக்கு இந்திய ஒலிம் பிக் சங்கமே பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் தடகள வீரர் மில்கா சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, " இந்திய வீரர்களின் செயல்திறன் முந்தைய ஒலிம்பிக் போட்டி களுடன் ஒப்பிடும்போது தரம் குறைந்ததாக உள்ளது. உண்மை தான், ரியோ ஒலிம்பிக்கில் நாம் சிறப்பாக செயல்படவில்லை. கடந்த ஒலிம்பிக் போட்டிகளில் நாம் சிறப்பாக செயல்பட்டு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளோம். தற்போதைய நிலைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம்தான் பொறுப்பேற்க வேண்டும்.
ரியோ ஒலிம்பிக் முடிவடைந்ததும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆலோ சனை கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்துக்கு தேசிய விளையாட்டு சங்கங் களின் தலைவர்கள், செயலா ளர்கள், விளையாட்டு அமைச்சகத்தின் பிரதி நிதிகள் ஆகியோரையும் அழைக்க வேண்டும். இதில் வருங்காலத்தில் ஒலிம்பிக் கில் சிறப்பாக செயல்படுவ தற்கான திட்டங்கள் குறித்து ஆராய வேண்டும்" என்றார்.
மில்கா சிங் கடந்த 1960-ல் ரோம் நகரில் நடை பெற்ற ஒலிம்பிக் போட்டி தடகளத்தில் 4-வது இடத்தை பிடித்து வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.