Published : 29 Mar 2014 10:40 AM
Last Updated : 29 Mar 2014 10:40 AM

மியாமி மாஸ்டர்ஸ்: செரீனாவுக்கு ‘செக்’ வைப்பாரா லீ நா?

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், 2-ம் நிலை வீராங்கனையான சீனாவின் லீ நாவும் மோதுகின்றனர்.

சர்வதேச டென்னிஸில் செரீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்த முறை அவருக்கு லீ நா “செக்” வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த ரஷியாவின் மரியா ஷரபோவாவைத் தோற்கடித்தார்.

இந்த ஆட்டத்தில் இரு செட்களின் தொடக்கத்திலும் செரீனாவின் சர்வீஸை முறியடித்த ஷரபோவாவால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த முடியாமல் போனது. செரீனாவிடம் 15-வது முறையாக தோல்வி கண்டிருக் கிறார் ஷரபோவா.

இதுவரை இவர்கள் இருவரும் 18 போட்டிகளில் மோதியுள்ளனர். அதில் இரண்டில் மட்டுமே ஷரபோவா வெற்றி கண்டுள்ளார். எஞ்சிய போட்டிகள் அனைத்திலும் செரீனாவே வெற்றி பெற்றுள்ளார். கடைசியாக 2004-ல் செரீனாவை வீழ்த்தியுள்ளார் ஷர போவா. அப்போது ஷரபோவாவின் வயது 17 என்பது குறிப்பிடத்தக்கது.

மியாமி மாஸ்டர்ஸில் ஷரபோவா இதுவரை 5 முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தாலும், ஒரு முறைகூட பட்டம் வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதியில் சீனாவின் லீ நா 7-5, 2-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவைத் தோற்கடித்து இறுதிச்சுற்றை உறுதி செய்தார்.

மியாமி மாஸ்டர்ஸில் 9-வது முறையாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறி யுள்ள செரீனா, இந்த முறை சாம்பி யனாகும் பட்சத்தில் தொடர்ந்து 2-வது முறையாக வாகை சூடியவர் என்ற பெருமையைப் பெறுவார். செரீனாவும், லீ நாவும் இதுவரை 11 முறை மோதியுள்ளனர். ஆனால் லீ நா ஒருமுறை மட்டுமே வெற்றி கண்டுள்ளார். கடந்த 6 ஆண்டுகளில் லீ நாவிடம் ஒருமுறைகூட செரீனா தோற்றதில்லை என்பது குறிப் பிடத்தக்கது.-ஏ.எப்.பி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x