நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி; தமிம் இக்பால், மோமினுல் அரை சதம்- முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி; தமிம் இக்பால், மோமினுல் அரை சதம்- முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிப்பு
Updated on
1 min read

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேச அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது.

வெலிங்டனில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட்டில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் வில்லியம்சன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த வங்கதேச அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரரான இம்ருல் கெய்ஸ் 1 ரன்னில், டிம் சவுத்தி பந்தில் ஆட்டமிழந்தார்.

இதை தொடர்ந்து தமிம் இக்பாலுடன் இணைந்த மோமினுல் நிதானமாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய தமிம் இக்பால் 50 பந்துகளில், 11 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்த நிலையில் டிரென் போல்ட் பந்தில் போல்டானர். அடுத்து களமிறங்கிய மஹ்முதுல்லா 24 ரன்களில், வாக்னர் பந்தில் நடையை கட்டினார்.

40.2 ஓவர்களில் வங்கதேச அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடை பட்டது. தொடர்ந்து மழை பெய்த தால் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. மோமினுல் 64, ஷகிப் அல்-ஹசன் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in