

இந்திய ஸ்பின் பிட்ச்களில் ஆடுவதற்கான தகுந்த உத்திகள் பெரும்பாலான தற்கால பேட்ஸ்மென்களிடம் இல்லை என்று திலிப் வெங்சர்க்கார் கூறியுள்ளார்.
திலிப் வெங்சர்க்கார் சுழற்பந்தை எதிர்கொள்ளும் ஒரு அருமையான பேட்ஸ்மென். பெங்களூருவில் இம்ரான் தலைமை பாகிஸ்தானுக்கு எதிராக இக்பால் காசிம், டசீப் அகமது பந்துகளை தாறுமாறாக திருப்பி எழுப்பிக் கொண்டிருந்த போது வெங்சர்க்கார் எடுத்த அரைசதம் அதன் எண்ணிக்கையை விட மதிப்பு வாய்ந்தது. டெரிக் அண்டர்வுட், அப்துல் காதிர் என்று பல சர்வதேச ஸ்பின்னர்களை துல்லியமாக ஆடியவர் வெங்சர்க்கார்.
விராட் கோலி மே.இ.தீவுகளில் இரட்டைச் சதம் அடித்த பிறகு 4 இன்னிங்ஸ்களில் 60 ரன்களையே எடுத்துள்ளார்.
தற்போதைய இந்திய பேட்ஸ்மென்கள் குறித்து அவர் கூறுவது கவனிக்கத்தக்கது:
“கடந்த 5-6 ஆண்டுகளில் நடப்பு இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பலர் ஓரிரு உள்நாட்டுப் போட்டிகளில் ஆடியிருந்தால் பெரிய விஷயம். நம் உள்ளூர் ஸ்பின்னர்களுக்கு எதிராக உள்நாட்டில் போட்டிகளில் விளையாடினால்தான் ஸ்பின் பந்துவீச்சை ஆதிக்கம் செலுத்த முடியும். இல்லையெனில் ஸ்பின் பவுலிங்குக்கு எதிராக அவர்களது உத்தி மேம்பாடடைய வாய்ப்பேயில்லை.
அடித்து ஆடுவது ஒரு வழி அவ்வளவே, ஆனால் சிறந்த உத்திதான் தன்னம்பிக்கையை அளிக்கும். தாமதமாக எப்படி ஆடுவது, பந்தை தரையில் எப்படி ஆடுவது போன்றவை மிக முக்கியம்.
ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷாட் தேர்வில் சரியாக இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய ஷாட் ஆடப்போய் ஆட்டமிழந்தால் அது ஊதிப்பெருக்கப்பட்டு பேசப்படும். ரோஹித் சர்மா உத்தி அளவில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதோடு, ஒருமுறை நன்றாகத் தொடங்கி விட்டால் அதனை பெரிய ஸ்கோராக மாற்றக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்றா வெங்சர்க்கார்.