மே 5-ல் அகில இந்திய ஹாக்கி போட்டி

மே 5-ல் அகில இந்திய ஹாக்கி போட்டி
Updated on
1 min read

கோவில்பட்டியில் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் வரும் மே 5-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் கூறியதாவது:

கோவில்பட்டி கே.ஆர். கல்வி நிறுவனங்கள் மற்றும் கே.ஆர். மருத்துவ அறக்கட்டளை சார்பில் லட்சுமி அம்மாள் நினைவு கோப் பைக்கான 9-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் மே மாதம் 5-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை கோவில்பட்டியிலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் நடைபெறும்.

‘பி’ கிரேடில் நடத்தப்படும் இப்போட்டிகளில் அகில இந்திய அளவில் 32 அணிகள் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளன.

சர்வதேச ஹாக்கி முன்னாள் வீரர்கள் அடங்கிய நிபுணர்கள் குழு அமைத்து, 16 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டு போட்டியில் விளையாட உள்ளன. போட்டிகள் லீக் முறையிலும் நாக் அவுட் முறை யிலும் நடத்தப்படுகிறது. தினமும் நான்கு போட்டிகள் நடைபெறும்.

முதலிடம் பெறும் அணிக்கு ரூ.1 லட்சம், லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பை வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in