அட்லெடிகொ - சென்னை ஆட்டம் டிரா

அட்லெடிகொ - சென்னை ஆட்டம் டிரா
Updated on
1 min read

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா-சென்னையின் எப்.சி. அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

இரு அணிகளுமே பலம் வாய்ந்தவை என்பதால் ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. சென்னையில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் (1-1) முடிந்ததால் இரு அணிகளும் தங்களின் பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கு தீவிரம் காட்டின. ஆனாலும் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோலடிக்க கடுமையாகப் போராடியபோதும் கடைசி வரை கோல் விழவில்லை. இதனால் ஆட்டம் கோலின்றி டிராவில் முடிய சொந்த மண்ணில் தங்கள் அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்த கொல்கத்தா ரசிகர்கள் ஏமாற்றத்தோடு மைதானத் திலிருந்து வெளியேறினர்.

புள்ளிகள் பட்டியில் இரு அணிகளும் தலா 13 புள்ளிகளுடன் இருந்தாலும், கோல் வித்தியாச அடிப்படையில் அட்லெடிகோ அணி முதலிடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டம்

நார்த் ஈஸ்ட்-புனே

இடம்: கவுகாத்தி

நேரம்: இரவு 7

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in