Published : 16 Jul 2016 09:57 AM
Last Updated : 16 Jul 2016 09:57 AM

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: தென் கொரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா முன்னிலை- ராம்குமார், மைனேனி வெற்றி

இந்தியா - தென் கொரியா இடையிலான ஆசிய- ஓசியானியா குரூப் 1 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி சண்டீகரில் நேற்று தொடங்கியது.

ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் முன்னணி வீரர்களான யூகி பாம்ப்ரி, சோம்தேவ் ஆகியோர் காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் அவர்களுக்குப் பதிலாக தமிழகத்தைச் சேர்ந்த ராம்குமார் ராமநாதன் மற்றும் சாகேத் மைனேனி ஆகியோர் ஒற்றையர் பிரிவில் களமிறங்கினர். ராம்குமாருக்கு இது அறிமுக டேவிஸ் கோப்பை போட்டியாக அமைந்தது.

ஒற்றையர் பிரிவு முதல் ஆட்டத்தில் தரவரிசையில் 217-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ராம்குமார், 427-வது இடத்தில் உள்ள தென் கொரியாவின் சியோங் சான் ஹாங்குடன் மோதினார். இதில் ராம்குமார் 6-3, 2-6, 6-3, 6-5 (15-15) என முன்னிலை வகித்த போது தொடை பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக சியோங் ஆட்டத்தில் இருந்து விலகினார். இதனால் ராம்குமார் வெற்றி பெற்றார். 21 வயதான ராம்குமார் 2 மணி நேரம் 36 நிமிடங்கள் போராடி இந்த வெற்றியை பெற்றார்.

ஒற்றையர் பிரிவின் 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றியை வசப்படுத்தியது. இந்தியாவின் சாகேத் மைனேனி 6-1, 3-6, 6-4, 3-6 5-2 என்ற கணக்கில் தென் கொரியாவின் யாங் கியூ லிம்மை வீழ்த்தினார். சாகேத் மைனேனி 5 செட்கள் வரை சென்றது இதுவே முதன்முறையாகும்.

இந்த இரு வெற்றிகளால் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. இன்று நடைபெறும் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் பயஸ்-போபண்ணா ஜோடி, தென் கொரியாவின் ஹாங் சிங்-யூன்சியோங் சங் ஜோடியுடன் மோதுகிறது. இவர் கள் இருவரிடையே மோதல் கள் இருந்தபோதும் ஒலிம்பிக் போட்டியில் ஒன்றாக களமிறங்கு வதால் இன்றைய ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடைசி நாளான நாளை நடை பெறும் மாற்று ஒற்றையர் ஆட்டத் தில் ராம்குமார், லிம்முடனும், மைனேனி, சியோங்குடனும் மோதுகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x