

நியூஸிலாந்து-இலங்கை அணிகள் இடையேயான 4வது ஒருநாள் போட்டி மழைகாரணமாக ரத்தானது.
24 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 9 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 75 ரன் எடுத்திருந்த போது கன மழை பெய்ததால் தொடர்ந்து போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது ராஸ் டெய்லர் 20, நிக்கோல்ஸ் 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
மார்ட்டின் குப்தில் 27, டாம் லதாம் 9, வில்லியம்சன் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் நியூஸிலாந்து 2-1 என முன்னிலை வகிக்கிறது. கடைசி ஒருநாள் போட்டி 5ம் தேதி மவுண்டில் நடைபெறுகிறது.