

இந்தியாவுக்கு எதிரான அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக் கப்பட்டுள்ளது. இதில் கைல் ஹோப், சுனில் ஆம்பிரிஸ் ஆகிய 2 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி, தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள் ளது. இந்த 2 அணிகளுக்கிடையே நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது. 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் மீதமுள்ள 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணி யில் கைல் ஹோப், சுனில் ஆம்பிரிஸ் ஆகிய 2 புதுமுகங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜொனாதன் கார்ட்டர், கெரிக் வில்லியம்ஸ் ஆகியோர் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சுனில் ஆம்பிரிஸ், கைல் ஹோப் ஆகிய இருவரும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடுவதால் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப் படுவதாக மேற்கிந்திய தீவுகள் அணியின் தேர்வுக்குழு தலைவர் கோட்னி பிரவுன் தெரிவித்தார்.
அடுத்த 3 ஒருநாள் போட்டிகளில் ஆடும் மேற்கிந்திய தீவுகள் அணி யில் இடம் பெற்றுள்ள வீரர்கள்:
ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), தேவேந்திரா பிஷூ, சுனில் ஆம்பிரிஸ், ராஸ்டன் சேஸ், கம்மின்ஸ், கைல் ஹோப், ஷாய் ஹோப், அல்ஸாரி ஜோசப், எவின் லீவிஸ், ஜேசன் முகமது, ஆஷ்லி நர்ஸ், கிரன் போவெல், ரோவ்மான் போவெல்.