

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், அஜய் ஜெயராம், எச்.எஸ்.பிரணாய் ஆகியோர் தோல்வி கண்டனர். இதன்மூலம் ஜப்பான் ஓபனில் இந்திய வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிச் சுற்றில் சீனாவின் ஹுவான் காவ் 21-11, 20-22, 21-13 என்ற செட் கணக்கில் பிரணாயைத் தோற்கடித்தார். மற்ற காலிறுதி ஆட்டங்களில் அஜய் ஜெயராம் 18-21, 13-21 என்ற நேர் செட்களில் வியத்நாமின் டின் மின் நுயனிடமும், ஸ்ரீகாந்த் 18-21, 9-21 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கெனிஸி டாகோவிடமும் தோல்வி கண்டனர்.