Published : 04 Jun 2016 09:44 AM
Last Updated : 04 Jun 2016 09:44 AM

செய்தித் துளிகள்...

டார்வினில் நடைபெற்று வரும் 4 நாடுகள் மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது.

*

சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் உறுப்பினர் பதவிக்கு ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் மற்றும் நிறுவனருமான நீட்டா அம்பானி மனுதாக்கல் செய்துள்ளார். வரும் ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை ரியோ டி ஜெனிரோவில் சர்வதேச ஒலிம்பிக் சங்க கூட்டம் நடைபெறுகிறது. இதில் நடைபெறும் தேர்தலில் நீட்டா அம்பானி உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்.

*

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விரைவில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் அந்த அணியின் யாசீர் ஷா, மிஸ்பா உல்-ஹக், அசார் அலி ஆகியோருக்கு ஐசிசி ஊக்க மருந்து சோதனை நடத்தியுள்ளது.

*

இந்தோனேஷிய ஓபன் பாட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங் கனை சாய்னா நெவால் தோல்வி யடைந்தார். முதல் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோ லினா மரினிடம் 22-24, 11-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

*

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் பங்கேற்றுள்ள நார்த் ஈஸ்ட் அணியின் 3-வது சீசன் போட்டிக்காக பிரேசில் பின்கள வீரர் மெயில்சன் ஆல்வ்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

28 வயதான மெயில்சன் கடந்த சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் எப்.சி. அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x