

இந்திய விளையாட்டு மேம் பாட்டு அமைப்பான கேலோ இந்தி யாவில் முன்னாள் நீளம் தாண்டும் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ், முன்னாள் பாட்மிண்டன் வீரர் கோபிசந்த் ஆகியோர் உறுப் பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அஞ்சு பாபி ஜார்ஜ் கடந்த சில நாட்களுக்கு முன்புதான் கேரள விளையாட்டு கவுன்சில் தலைவர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
7 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பில் இவர்கள் இருவர் மட்டுமே முன்னாள் விளையாட்டு வீரர்கள். இந்த அமைப்புக்கு விளை யாட்டுத்துறை செயலாளர் ராஜிவ் யாதவ் தலைவராக உள்ளார்.