கனெக்டிகட் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி பட்டம் வென்றது

கனெக்டிகட் ஓபன் டென்னிஸ்: சானியா ஜோடி பட்டம் வென்றது
Updated on
1 min read

கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் சானியா மிர்சா - மோனிகா ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய டென்னிஸ் வீராங்கனை யான சானியா மிர்சா தற்போது ருமேனியாவின் மோனிகா நிக்கல் சுவுடன் இணைந்து மகளிர் இரட் டையர் டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த ஜோடி கனெக்டிகட் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில் நேற்று கேதரினா - சுவாங் சியா ஜோடியை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் சானியா - மோனிகா ஜோடி 7 5, 6 4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி யது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றபோதிலும் இந்த ஜோடி பிரிய முடிவெடுத்துள்ளது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பார்பரா ஸ்டிரைகோவாவுடன் இணைந்து ஆடவுள்ளதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

பயஸ் ஜோடி தோல்வி

அமெரிக்காவின் வின்ஸ்டன் சலேம் நகரில் நடந்த ஏடிபி டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜெர்மனியின் ஆன்ட்ரே பெக்மேன் ஜோடி தோல்வியடைந்தது. இந்த ஜோடியை கிலெர்மோ கிரேஷியா லோபஸ் -ஹென்றி கோண்டினன் ஜோடி 4 6, 7 6(6), 10 8 என்ற செட்கணக்கில் போராடி வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in