முதலிடத்தை வலுப்படுத்தியது தென்னாப்பிரிக்கா

முதலிடத்தை வலுப்படுத்தியது தென்னாப்பிரிக்கா
Updated on
1 min read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் தனது முதலிடத்தை தென்னாப்பிரிக்கா மேலும் வலுப்படுத்திக் கொண்டுள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் கூடுதலாக இரு புள்ளிகளைப் பெற்று மொத்தம் 133 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள இந்தியா 2 புள்ளிகளை இழந்து, மொத்தம் 117 புள்ளிகள் என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் இரு அணிகளுக்கு இடையிலான புள்ளிகள் வித்தியாசம் 12 இருந்து 16 ஆக அதிகரித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள இங்கிலாந்து ஆஷஸ் தொடரில் ஏற்பட்டுள்ள 4 தொடர் தோல்விகளால் 4-வது இடத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆஷஸ் தொடரின் கடைசி மற்றும் 5-வது போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றால் அந்த அணி 3-வது இடத்துக்கு முன்னேறும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in