யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் இத்தாலி

யூரோ கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் இத்தாலி
Updated on
1 min read

யூரோ கோப்பை கால்பந்தில் நேற்று மாலை இ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் இத்தாலி-சுவீடன் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் எதும் அடிக்கப்படவில்லை. இத்தாலி அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளுக்கு சுவீடன் வீரர்கள் முட்டுக்கட்டை போட்டனர்.

82-வது நிமிடத்தில் இத்தாலி நடுகள வீரர் பரோலோ தலையால் முட்டிய பந்து கோல் கம்பத்தின் விளிம்பில் பட்டு வெளியேறியது. அடுத்த 6-வது நிமிடத்தில் இத்தாலி கோல் அடித்தது. ஜாஜா உதவியுடன் சுவீடனின் தடுப்பு அரண்களை ஏமாற்றி இந்த கோலை ஈடர் அடித்தார். முடிவில் இத்தாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தாலி அணிக்கு இது 2-வது வெற்றியாகும். அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது. இரு வெற்றிகளின் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு இத்தாலி முன்னேறியது. கடைசி லீக் ஆட்டத்தில் இத்தாலி 22-ம் தேதி அயர்லாந்தை எதிர்த்து விளையாடுகிறது.

சுவீடன் முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் டிரா செய்திருந்த நிலையில் தற்போது தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் பெல்ஜி யத்துக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஜெர்மனி ஆட்டம் டிரா

நேற்று முன்தினம் நள்ளிரவு சி பிரிவில் ஜெர்மனி - போலந்து அணிகள் மோதிய ஆட்டம் கோலின்றி டிராவில் முடிவ டைந்தது. உலக சாம்பியனான ஜெர்மனி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த அணியின் கோல் அடிக்கும் பல முயற்சிகளை போலந்து வீரர்கள் முறியடித்தனர். இந்த ஆட்டத்தின் முடிவு ஜெர்மனி ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகவே இருந்தது. முதல் ஆட்டத்தில் உக்ரைன் அணியை வீழ்த்திய ஜெர்மனி தனது கடைசி லீக் ஆட்டத்தில் 21-ம் தேதி வடக்கு அயர்லாந்தை சந்திக்கிறது.

வடக்கு அயர்லாந்து வெற்றி

இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் வடக்கு அயர்லாந்து 2-0 என்ற கோல் கணக் கில் உக்ரைனை வீழ்த்தியது. வடக்கு அயர்லாந்துக்கு இது முதல் வெற்றியாகும். அதே வேளையில் 2-வது தோல்வியை சந்தித்த உக்ரைன் அடுத்த சுற்றுக்கு முன்னே றுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இன்றைய ஆட்டங்கள்

பெல்ஜியம்-அயர்லாந்து

நேரம்: மாலை 6.30

ஐஸ்லாந்து-ஹங்கேரி

நேரம்: இரவு 9.30

போர்ச்சுக்கல்-ஆஸ்திரியா

நேரம்: நள்ளிரவு 12.30

ஒளிபரப்பு: சோனி இஎஸ்பிஎன்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in