

மாற்றங்களை சந்தித்து வரும் பிசிசிஐ அதிர்ச்சியடையும் விதமாக ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தங்களால் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை நடத்த முடியாது என்று பிசிசிஐ-யிடம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 8 முதல் 12-ம் தேதி வரை நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியை ‘நிதிப் பற்றாக்குறை’ காரணமாக நடத்த முடியாது என்று ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
இதோடு மட்டுமல்லாமல் இங்கிலாந்து அண்டர் 19 அணிக்கு எதிரான இரண்டு இந்தியா அண்டர் 19 கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த இயலாது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கமும் கைவிரித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் நியமித்த ஒரு மூத்த பிசிசிஐ அதிகாரி ஜனவரி 3-ம் தேதியே பிசிசிஐ உறுப்பு வாரியங்கள் போட்டிகளை நடத்த இயலாது என்று கூறக்கூடிய வாய்ப்பை சுட்டிக்காட்டியிருந்தார்.
பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் வரும் நிலையில் இந்த புதிய போக்கு கிரிக்கெட் ஆர்வலர்களையும் பிசிசிஐ-யையும் கவலையடையச் செய்துள்ளது.