

ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் தகுதி சுற்றில் இந்தியாவின் ஜிது ராய், பிரகாஷ் நஞ்சப்பா ஆகியோர் பங்கேற்றனர்.
இதில் ஜிது ராய் 554 புள்ளிகள் பெற்று 12-வது இடத்தையும், நஞ்சப்பா 547 புள்ளிகளுடன் 25-வது இடத்தையுமே பிடிக்க முடிந்தது.
இந்த சுற்றில் முதல் 8 இடங்களுக்குள் வருபவர்கள் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பதால் இந்திய வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.
ஆடவர் 77கிலோ உடல் எடைப்பிரிவு ஆடவர் வெய்ட் லிப்டிங்கில் 4வதாக முடிந்து வெளியேறினார்.
90 கிலோ ஜூடோவில் அவதார் சிங் 32-வது சுற்றில் போபோல் மிசெங்காவிடம் தோல்வி தழுவினார்.
மகளிர் ஹாக்கியில் ஆஸ்திரேலியாவிடம் இந்திய அணி 6-1 என்ற கோல் கணக்கில் படுதோல்வி தழுவியது.