Last Updated : 10 Mar, 2017 09:39 AM

 

Published : 10 Mar 2017 09:39 AM
Last Updated : 10 Mar 2017 09:39 AM

ஓய்வறை உதவியை நாடிய விவகாரம்: ஸ்டீவ் ஸ்மித் மீது நடவடிக்கை இல்லை- ஐசிசி அறிவிப்பு

பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் விவகாரத்தில் ஆஸ்தி ரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், விதிமுறைகளுக்கு புறம் பாக களத்தில் இருந்தபடி ஓய்வறை யின் உதவியை நாடினார். இதுதொடர்பாக விராட் கோலி, கள நடுவரிடம் புகார் செய்தார்.

இந்த போட்டியின் தொடக்க நாளில் இருந்தே ஸ்மித் இதுபோன்று நடந்து கொண்டதாக ஏற்கெனவே கோலி, புகார் தெரிவித்திருந்ததால் ஸ்மித்தின் செயலை கவனித்த களநடுவ ரான இங்கிலாந்தின் நைஜல் லாங்கும் அவரை கண்டித்தார்.

தனது தவறை ஸ்மித் ஒப்புக் கொண்ட நிலையில் மதி மயங்கி செய்துவிட்டதாக மழுப்பலாக பதில் தெரிவித்தார். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரி யமும், பயிற்சியாளர் டேரன் லேமனும் ஸ்மித்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் ஐசிசி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிசிசிஐ தரப்பில் வலியுறுத்தப் பட்டது. இந்நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஒரு அற்புதமான ஆட்டத்தை நாம் அனைவரும் பார்வையிட்டோம். இரு அணி வீரர்களுமே போட்டியின் போதும் அதன் பிறகும் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.

இதனால் ஸ்மித், கோலி உட்பட எந்த ஒரு வீரர் மீதும் நடவடிக்கை எடுக்க தேவை இல்லை. ராஞ்சியில் அடுத்த வாரம் நடைபெற உள்ள 3-வது டெஸ்ட் போட்டியில் இரு அணி களும் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக நாங்கள் இரு அணி களையும் ஊக்குவிக்கிறோம். மேட்ச் ரெப்ரி, இரு அணிகளின் கேப்டன்களின் பொறுப்பையும் ஞாபகப்படுத்துவார்’’ என தெரிவித் துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x