Published : 20 May 2015 02:21 PM
Last Updated : 20 May 2015 02:21 PM

இந்திய அணி அறிவிப்பு: டெஸ்ட்டில் ஜடேஜா நீக்கம், ஹர்பஜனுக்கு வாய்ப்பு

வங்கதேசத்துக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டிக்கு இந்திய அணியில் ஹர்பஜன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரவீந்திர ஜடேஜா டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை, ஐபிஎல் கிரிக்கெட் என்று தொடர்ச்சியாக ஆடிவந்த போதிலும் இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கவில்லை.

வங்கதேச பேட்டிங் வரிசையில் நிறைய இடது கை பேட்ஸ்மென்கள் இருப்பதால் கூடுதல் ஆஃப் ஸ்பின்னர் தேவைப்படும் என்று ஹர்பஜன் சிங் தேர்வு செய்யப்பட்டதாக தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தெரிவித்தார்.

டெஸ்ட் அணி: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவன், கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே, ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், கரன் சர்மா, புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், வருண் ஆரோன், இஷாந்த் சர்மா.

ஒருநாள் போட்டிகளுக்கான அணி: தோனி (கேப்டன்), ரோஹித் சர்மா, ரஹானே, ஷிகர் தவன், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, அம்பாட்டி ராயுடு, அஸ்வின், ஜடேஜா, அக்சர் படேல், புவனேஷ் குமார், உமேஷ் யாதவ், மோஹித் சர்மா, ஸ்டூவர்ட் பின்னி, தவல் குல்கர்னி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x