

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், இலங்கைக்கு 265 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி.
பதுல்லாவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை, முதலில் பேட் செய்ய இந்தியாவை அழைத்தது.
துவக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின், தவாண் - விராட் கோலி ஜோடி மிகச் சிறப்பாக விளையாடியது.
விராட் கோலி 48 ரன்கள் அடித்து அரைசதத்தைத் தவறவிட்டார். தவாண் 114 பந்துகளில் 94 ரன்கள் எடுத்து சதத்தைத் தவறவிட்டார்.
இவ்விரு விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டதன்பின், இந்தியாவின் ரன் குவிப்பு வேகம் வெகுவாக குறைந்தது.
ரஹானே 22 ரன்களும், ராயுடு 18 ரன்களும் எடுத்தனர். தினேஷ் கார்த்திக் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னி ரன் ஏதும் எடுக்கவில்லை.
அஸ்வின் 18 ரன்களிலும், புவனேஸ்வர் குமார் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காத ரவீந்தர ஜடேஜா 21 ரன்களையும், கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கி இரண்டு சிக்சர்களை விளாசிய முகமது சமி ஆட்டமிழக்காமல் 14 ரன்களையும் சேர்த்தனர்.
இன்னிங்ஸ் இறுதியில், இந்தியா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் சேர்த்தது.
இலங்கை தரப்பில் சேனனாயக மெண்டிஸ் 4 விக்கெட்டுகளையும், 3 விக்கெட்டுகளையும், மலிங்கா மற்றும் டி சில்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.