லலித் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு

லலித் மோடிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு
Updated on
1 min read

லலித் மோடி ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகக் கூடாது என்று உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மனு தாக்கல் செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் நடைபெற்றது. இதில் ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி போட்டியிட்டார். இத்தேர்தல் முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

முன்னதாக ஐபிஎல் போட்டியில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை அடுத்து லலித் மோடியை கிரிக்கெட் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட முடியாத அளவுக்கு பிசிசிஐ தடை விதித்தது. அவர் மீது பல்வேறு புகார்களையும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் லலித் மோடி ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் சங்க தேர்தலில் போட்டியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் பிசிசிஐ மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், பிசிசிஐ ஆட்சேபம் தெரிவித்த பின்னரும் ராஜஸ்தான் கிரிக்கெட் வாரியம் மோடியின் வேட்புமனுவை ஏற்றுக் கொண்டது தவறானது. கிரிக்கெட் வாரியத்தின் நற்பெயரைக் கெடுக்கும்வகையில் மோடி நடந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை ஜனவரி 6-ம் தேதி நடைபெறவுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in