

ஜெர்மனியில் நடைபெற்று வரும் முல்ஹெய்ம் அன் டெர் ரூர் நகரில் நடைபெற்று வரும் ஜெர்மன் ஓபன் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அரவிந்த் பட் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
தேசிய அளவிலான போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டம் வென்றவரான அரவிந்த் பட் தனது காலிறுதியில் 21-17, 21-14 என்ற நேர் செட்களில் சர்வதேச தரவரிசையில் 14-வது" இடத்தில் உள்ளவரான டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ஸெனைத் தோற்கடித்தார்.