ஓரிரு போட்டிகளில் சரியாக வீசாவிட்டால் உடனே முத்திரை குத்தி விடுகிறார்கள்: இசாந்த் சர்மா வருத்தம்

ஓரிரு போட்டிகளில் சரியாக வீசாவிட்டால் உடனே முத்திரை குத்தி விடுகிறார்கள்: இசாந்த் சர்மா வருத்தம்
Updated on
1 min read

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இசாந்த் சர்மா இடம்பெறவில்லை, மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் ஏலத்தில் விலை போகாமல் கடைசியில் கிங்ஸ் லெவன் அணி இசாந்த்தை ஒப்பந்தம் செய்தது.

தன்னுடைய நிலை பற்றிக் கூறிய இசாந்த் சர்மா, “முன்னதாக ஒரு நேர்காணலில் நான் தெரிவித்தது என்னவெனில் டி20 வடிவத்தில் நான் சரியாக ஆடவில்லை என்று கூறினேன், அது உடனே தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.

அவ்வாறு கூறியதை, நான் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் ஆடுவதை விரும்புகிறேன் என்பதாக முத்திரைக் குத்தப்பட்டது. இந்தியாவில் இதுதான் மோசமான விஷயம்.

ஓரிரு போட்டிகளிலோ அல்லது ஒருதொடரிலோ சரியாக ஆடவில்லை எனில் ஒரே வடிவத்துக்கு மட்டுமே நான் பொருத்தமானவன் என்று முடிவு கட்டி விடுகிறார்கள்.

குறைந்த ஓவர் போட்டிகளில் பவுலர்களுக்கு சாதகம் மிகக் குறைவு. பவுண்டரிகள் தூரம் குறைவு, முழுதும் பேட்டிங் பிட்ச்...இவையெல்லாம் பவுலரின் சுமையை அதிகரிக்கிறது.

டி20 கிரிக்கெட்டில் ரன்கள் கொடுப்பது சகஜம், எனவே பேட்ஸ்மென் என்ன செய்யப்போகிறார் என்பது பற்றி அதிகம் யோசிக்கக் கூடாது. ஐபிஎல் கிரிக்கெட்டில் புதிய முறை பந்துகளை சோதித்துப் பார்க்க போதிய கால அவகாசம் இல்லை” என்றார் இசாந்த் சர்மா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in