

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடரில் பிபிசிஎல், ஓஎன்ஜிசி அணிகள் அரை இறுதிக்கு முன்னேறியது.
சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் நேற்று கடைசி லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு ஆட்டத்தில் ஓஎன்ஜிசி 3-2 என்ற கோல் கணக்கில் ராணுவ லெவன் அணியையும், பிபிசிஎல் 2-1 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு ஹாக்கி அணியையும் வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறின.