

இங்கிலாந்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் என்று மிஸ்டர் கிரிக்கெட் என்று செல்லமாக அழைக்கப்படும் மைக் ஹஸ்ஸி கணித்துள்ளார்.
ஆஸ்திரேலிய இணையதளத்தில் அவர் கூறும்போது, “ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் சாம்பியன்ஸ் டிராபி இறுதியில் மோதும்.
இத்தகைய தொடர்களில் கணிப்பது கடினம்தான், ஏனெனில் அனைத்து அணிகளுமே நன்றாக உள்ளன. ஆனால் இங்கிலாந்து வெற்றி பெற வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பிலும் திறமை வாய்ந்த ஒரு அணியாக இங்கிலாந்து விளங்குகிறது.
அந்த அணி நல்முறையில் வழிநடத்தப்பட்ட, நல்வழியில் பயிற்சியளிக்கப்பட்ட அணி இங்கிலாந்து. உள்நாட்டில் ஆடுவதால் அதன் அனுகூலம் அவர்களுக்கு அதிகம். ரசிகர்கள் ஆதரவும் கூடுதல் பலன்.
ஆஸ்திரேலிய அணியும் சமபலத்துடன் திகழ்கிறது. பேட்டிங்கில் திடீர் அதிரடி எழுச்சி வீரர்களுடன் மிக அருமையான வேகப்பந்து வீச்சு வரிசையைக் கொண்டுள்ளது.
டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித்துடன் கிறிஸ் லின் ‘கிளிக்’ ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு மேலும் அது வலு சேர்க்கும்” என்றார் மைக் ஹஸ்ஸி.