

ஆஸ்திரேலியாவில் நடை பெற்றுவரும் பிரிஸ்பேன் ஓபன் டென்னிஸ் அரையிறு தியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ரஷ்யாவின் மரியா ஷரபோவா ஆகியோர் மோதவுள்ளனர்.
இப் போட்டி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்பு நடைபெறுவதால் அதற்கான பயிற்சியாகவும் இருக்கும். எனவே செரீனா ஷரபோவா இடையிலான மோதல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச மகளிர் டென்னிஸ் தரவரிசையில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திலும், மரியா ஷரபோவா 4-வது இடத்திலும் உள்ளனர்.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 2012-ம் ஆண்டு பிரிஸ்பேன் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற எஸ்தானியாவின் கயா கனிபியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார் ஷரபோவா.
காயம் காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வில் இருந்த ஷரபோவா, கடந்த வாரம்தான் மீண்டும் களமிறங் கினார்.
செரீனா வில்லியம்ஸ் காலிறுதியில் ஸ்லோவேகி யாவின் டிமினிகா சிபுல்கோ வாவை எதிர்கொண்டார்.
இதில் 6-3,6-3 என்ற நேர் செட்களில் செரீனா வில்லியம்ஸ் எளிதாக வெற்றி பெற்றார்.
கடந்த ஆண்டில் டென்னிஸ் போட்டியில் வெற்றிகரமான வீராங்கனையாக செரீனா விளங்கினார். மொத்தம் 82 ஆட்டங்களில் பங்கேற்ற அவர் 78-ல் வெற்றி பெற்றார். மொத்தம் 11 பட்டங்களை அவர் வென்றார்.