Published : 09 Aug 2016 10:40 AM
Last Updated : 09 Aug 2016 10:40 AM

இந்தியா- மே.இ.தீவுகள் 3-வது டெஸ்டில் இன்று மோதல்

இந்தியா-மேற்கிந்தியத் தீவுகள் இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கிராஸ் ஸ்லெட் நகரில் உள்ள டேரன் சமி மைதானத்தில் தொடங்குகிறது.

4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது டெஸ்ட்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பின்கள வீரர்கள் நேர்த்தியாக விளையாடி ஆட்டத்தை டிராவில் முடித்தனர். இந்த ஆட்டத்தில் அந்த அணியின் ராஸ்டன் சேஸ் 137 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு தடை கல்லாக இருந்தார்.

இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்புள்ளது. 5 நாள் ஆட்டத்தில் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மைதானம் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி கூடுதலாக ஒரு பேட்ஸ்மேனுடன் களமிறங்கக்கூடும். வேகப்பந்து வீச்சில் இஷாந்த் சர்மா அல்லது உமேஷ் யாதவ் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இதேபோல் அமித் மிஷ்ராவுக்கு பதிலாக ஜடோ இடம்பெறக்கூடும். தொடக்க வீரர் முரளி விஜய் முழு உடல் தகுதியை பெறாததால் கே.எல்.ராகுலே களமிறங்கு கிறார்.

போட்டி நடைபெறும் மைதானத்தில் இதுவரை நடை பெற்றுள்ள 4 டெஸ்ட் போட்டி களில் 3 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்துள்ளது. ஒரு ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வங்கதேசத்தை வீழ்த்தியிருந்தது. இந்திய அணி இங்கு 2006-ல் நடைபெற்ற போட்டியை டிரா செய்திருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x