

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை. இளம் வீரர் புஜாராவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், ஐசிசி டிவென்டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றுள்ளார்.
சமீப காலமாக சரிவர விளையாடாத இஷாந்த் சர்மா, ஆசிய கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை இரண்டிலும் இடம்பெறவில்லை.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
தோனி, தவாண், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, புஜாரா, ராயுடு, ரஹானே, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் ஆரோன், ஸ்டுவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, ஈஸ்வர் பாண்டே.
உலகக் கோப்பை டி20-க்கான இந்திய அணி:
தோனி, தவாண், ரோஹித் ஷர்மா, விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, யுவராஜ் சிங், ரஹானே, ஜடேஜா, அஸ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஸ்டுவர்ட் பின்னி, அமித் மிஸ்ரா, மோஹித் ஷர்மா, வருண் ஆரோன்