Published : 21 Oct 2013 07:40 PM
Last Updated : 21 Oct 2013 07:40 PM

டென்னிஸ் தரவரிசை: மீண்டும் டாப்-10-ல் சானியா

சர்வதேச மகளிர் இரட்டையர் டென்னிஸ் தரவரிசையில் மீண்டும் டாப் 10-ல் இடம்பெற்ற இந்தியாவின் சானியா மிர்சா 9-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

முன்பு 11-வது இடத்தில் இருந்த சானியா இன்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசைப் பட்டியலில் இரு இடங்கள் முன்னேறினார்.

இம்மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற சீன ஓபன் மற்றும் பான் பசிபிக் ஓபன் டென்னிஸ் போட்டிகளின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா – ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த வாரத்தில் சானியா எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. எனினும் மற்ற வீராங்கனைகள் புள்ளிகளை இழந்ததால், சானியா முன்னேற்றம் கண்டார். காரா பிளாக் ஓர் இடம் முன்னேறி 13-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

மகளிர் இரட்டையர் தரவரிசையில் இத்தாலியின் சாரா எர்ரானி, ரோபர்டா வின்ஸி இணை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x