

ஐசிசி தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. ஒரு நாள் போட்டிகளுக்கான தர வரிசைப் பட்டியலில் இந்திய வீரர் சத்தேஸ்வர் புஜாரா 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். விராட் கோஹ்லி 11-வது இடத்துக்கு பின் தள்ளப்பட்டுள்ளார்.
பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 851 புள்ளிகளுடன் புஜாரா டாப் 10-ல் இடம் பிடித்துள்ளார். பவுலர்கள் பட்டியலில் ரவிச்சந்திரன் அஸ்வின் 7-வது இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான பட்டியலிலும் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டி தரவரிசைப் பட்டியலில், தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் 912 புள்ளிகளுடன் முதல் இடத்தையும், மே.இந்தியத் தீவுகள் வீரர் ஷிவ் நரெய்ன் சந்தர்பால் 876 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நியூசிலாந்து வீரர் ராஸ் டெய்லர் 871 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். கோஹ்லி 739 புள்ளிகள் பெற்றுள்ளார்.
பவுலர்கள் பட்டியலில், பிரக்யான் ஓஜா 9-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஓஜாவின் இடத்தை ஆஷஸ் தொடரில் 5 டெஸ்ட் போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஜான்சன் பிடித்துள்ளார்.