Published : 16 Oct 2013 07:55 PM
Last Updated : 16 Oct 2013 07:55 PM

ஜெய்ப்பூர் ஒருநாள் போட்டியில் ஆஸி. அணி புதிய உலக சாதனை

ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டியில், களமிறங்கிய முதல் 5 வீரர்கள் அரைசதம் எடுத்ததே அந்த உலக சாதனை ஆகும்.

இப்போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது.

துவக்க ஆட்டக்காரர்களான ஃபின்ச் 50 ரன்களும், ஹுயூயஸ் 83 ரன்களும் எடுத்தனர்; அவர்களைத் தொடர்ந்து வாட்ஸன் 59 ரன்களையும், கேப்டன் பெய்லி ஆட்டமிழக்காமல் 92 ரன்களும், மேக்ஸ்வல் 53 ரன்களும் எடுத்தனர்.

ஒரு நாள் ஆட்டத்தில் முதல் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது, கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை.

அதேபோல், ஒருநாள் கிரிக்கெட் இன்னிங்ஸ்சில் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தது இது இரண்டாவது தடவை.

முன்னதாக, 2008-ல் நடந்த ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், பாகிஸ்தான் அணியின் இரண்டாவது பேட்ஸ்மேன் தொடங்கி, 6-வது பேட்ஸ்மேன் வரையில் 5 பேர் அரைசதம் அடித்து சாதனை புரிந்தது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x