Published : 23 Mar 2017 10:03 AM
Last Updated : 23 Mar 2017 10:03 AM

இந்திய அணி அஞ்சுகிறது: சீண்டும் மிட்செல் ஸ்டார்க்

எங்களிடம் தோல்வியடைந்து தொடரை இழந்து விடுவோம் என இந்திய அணி அஞ்சுகிறது என ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஸ்டார்க், இந்தியா வுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் போது காயம் அடைந்தார். இதனால் அவர், எஞ்சிய டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியதுடன் சிகிச்சை பெறுவதற்காக தாயகம் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் கிரிக் இன்போ இணையதளத்துக்கு மிட்செல் ஸ்டார்க் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

இந்திய அணி வீரர்களுடன் சண்டையிட ஆஸ்திரேலிய அணி செல்லவில்லை. வீரர்களுக்கு இடையிலான வார்த்தை மோதல்கள் புனே டெஸ்ட் போட்டி யில் இந்திய அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகுதான் அதிகமானது. எங்களைவிட அவர்கள் பக்கத்தில் இருந்துதான் அதிக அளவில் இது வெளிப்பட்டது.

தங்களை பாதுகாத்து கொள்ள இந்திய அணியினர் வாக்குவாதங்களில் ஈடுபடு கின்றனர். எனினும் சவாலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். நாங்கள் எந்த வழியில் கிரிக்கெட் விளையாடி வருகிறோம் என்பதை ராஞ்சி போட்டியின் மூலம் காணலாம். ஹேண்ட்ஸ்கம்ப், ஷான் மார்ஷ் போன்ற இளம் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு குழுவாக ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடி வருகிறது.

இந்திய அணி எங்களை கண்டு அஞ்சுகிறது. ஏனெனில் இந்திய அணியை சொந்த மண்ணிலேயே வீழ்த்தி உள்ளோம். தர்மசாலா போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என கருதுகிறேன். இந்த தொடர் முழுவதுமே நாங்கள் சாவாலை வெளிப்படுத்தியதுடன் போராட்ட குணத்துடன் விளை யாடி உள்ளோம். இவ்வாறு மிட்செல் ஸ்டார்க் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x