தீபிகாவின் அம்பு பாயுமா?

தீபிகாவின் அம்பு பாயுமா?
Updated on
2 min read

இந்தியாவை பொறுத் தவரையில் விளையாட் டில் பெண்கள் பங்கேற் பதும் அவர்கள் சர்வதேச அளவில் சாதனைகளை படைப்பதும் அரிதாகவே நடைபெற்று வருகிறது. அதிலும் யாரும் அவ்வளவு எளிதில் தேர்வு செய்ய முன் வராத ஒரு விளையாட்டை தேர்வு செய்ய முன்வருவது என்பது அந்தப் பெண் அந்த விளையாட்டின் மீது கொண்டுள்ள காதலாகத் தான் இருக்க முடியும்.

ஆமாம். அப்படித் தான் வில் வித்தை வீராங்கனையான தீபிகா குமாரியின் ஆர்வமும். கிரிக்கெட்டில் பல்வேறு சாதனை| களை படைத்த இந்திய அணியின் கேப்டன் தோனியின் சொந்த ஊரான ராஞ்சியை சேர்ந்தவர் தான் தீபிகா குமாரி. இவரது சொந்த ஊர் ராஞ்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ள ரட்டு ஷாட்டி கிராமம்.

சிறு வயதில் தீபிகா மரத்தில் உள்ள மாங்காய்களை குறி பார்த்து கல்லால் எறிந் துள்ளார். பலமுறை அவரது இலக்கு காய்களை வீழ்த்தியது. அப்போது தான் அவரது பெற்றோர் தீபிகாவுக்குள் வில்வித்தை திறமை இருப்பதை கண்டறிந்தனர்.

ஆனால் குடும்பத்தின் பொரு ளாதாரம் தீபிகாவின் திறனை வளர்க்க தடையாக இருந்தது. ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தையாலும், செவிலியரான அவரது தாயாலும் வில்வித் தையை முறைப்படி தீபிகாவுக்கு கற்றுக்கொடுக்கவோ, அதற்கு தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுக்கவோ முடிய வில்லை.

இதனால் வீட்டிலேயே மூங்கில் கொண்டு தயாரிக்கப் பட்ட வில் மற்றும் அம்புகளை கொண்டு தீபிகா பயிற்சியில் ஈடுபடத் தொடங்கினார். அவரின் திறமை நாளுக்கு நாள் மேம்படு வதை அறிந்த பெற்றோர் தங்க ளது தேவைகளை ஒதுக்கி வைத்து விட்டு தீபிகாபின் வில் வித்தைக்காக செலவு செய்ய ஆரம்பித்தனர்.

அவர் தனது 11-வது வயதில் அர்ஜூன் வில்வித்தை அகாட மியில் சேர்ந்தார். 2006-ல் தனது உறவினரான வித்தியா குமாரி மூலம் டாடா வில்வித்தை அகாடமி யில் தீபிகாவுக்கு இடம் கிடைத் தது. 3 வருடம் தீவிரப் பயிற்சிக்கு பின்னர் 15-வது வயதில் தீபிகா கேடட் உலக சாம்பியன்ஷிப்பில் கலந்து கொண்டு முதல் பட்டத்தை வென்றார்.

அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு பகுதிக ளுக்கு பயணம் செய்து வில் வித்தை போட்டியில் பங்கேற்க தொடங்கினார். ரிகர்வ் பிரிவில் திறமை வாய்ந்த தீபிகா ஆக்டெ னில் நடைபெற்ற போட்டியில் தங்கம் வென்று அசத்தினார். அதன் பின்னர் பெரும்பாலும் கலந்து கொள்ளும் போட்டிகள் அனைத்திலும் வெற்றியை வசப்படுத்துபவராக மாறினார்.

இதனால் பதக்கங்கள் குவியத் தொடங்கின. 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இரு தங்கப் பதக்கம் கைப்பற்றினார். பல்வேறு போட்டிகளில் உலக சாதனைகள் படைத்தும் வெற்றி பெற்றதால் முதல் நிலை வீராங்கனை அந்தஸ்தையும் பெற்றார் தீபிகா.

இதனால் 2012 லண்டன் ஒலிம் பிக்கில் இவர் மீதான எதிர் பார்ப்பு மேலோங்கியது. ஆனால் தனிநபர் முதல் சுற்றுப் போட்டி யில் தீபிகா குமாரி, இங்கிலாந்தின் ஆமி ஆலிவரிடம் தோல்வியை சந்தித்தார். இதனால் கோடிக் கணக்கான இந்திய ரசிகர்களின் நம்பிக்கை பொய்த்து போனது.

தற்போது 22 வயதாகும் தீபிகா 2-வது முறையாக இந்திய மக்களின் பதக்க கனவை ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு சுமந்து செல் கிறார். கடந்த முறை ஏற்பட்ட தோல்வியில் இருந்து பாடம் கற் றுள்ள தீபிகா தனது திறமையை மேலும் மெருகேற்றி உள்ளார்.

ரியோ ஒலிம்பிக் தொடர்பாக தீபிகா குமாரி கூறும்போது, “கடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற போது எனக்கு அதிக அனுபவம் கிடையாது. தனிநபரின் முதல் ஆட்டத்திலேயே தோல்வி யடைந்ததால் அணிகள் பிரிவிலும் என்னால் கவனம் செலுத்த முடியா மல் போனது. ஆனால் தற்போது நான் முதிர்ச்சி பெற்றுள்ளேன். அதிக அனுபவத்துடன் போட்டி யில் முன்னேற்றமும் கண்டுள் ளேன். இம்முறை பதக்கம் வெல்ல கடுமையாக போராடுவேன்” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in