

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது. இதன் கலப்பு இரட்டையர் டென்னிஸ் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், ராஜீவ் ராம் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஷ்ய இணையதளம் ஒன்று சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்த முக்கியமான ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டது. மேலும் தடைசெய்யப்பட்ட பெருளை சாப்பிட அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ரஷ்ய இணையதளம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து இந்திய டென்னிஸ் சங்கம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என சானியா தரப்பில் கடிதம் அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் பொதுச் செய லாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜி கூறும்போது, யார் தரப்பில் இருந் தும் எங்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் வரவில்லை. வாய்மொழி யாகத்தான் கூறினர்.
அதுவும் சானியாவின் தாய் நசிமா எங்களை அணுகவில்லை. சானியாவின் தந்தை இம்ரன் மிர்சாதான் எங்களை தொடர்பு கொண்டார். அதுவும் சர்வதேச ஊக்கமருந்து தடுப்பு மையத்தின் இணையதள தகவல்கள் திருடப் பட்டது குறித்துதான் பேசினார்" என்றார்.
இந்நிலையில் இந்திய டென்னிஸ் சங்கம் இதுதொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் ‘‘வீனஸ் விஷயமாக சானியாவோ, அவரது தாயாரோ எங்களுக்கு எந்த கடிதமும் அனுப்பவில்லை’’ என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த சானியா, ‘‘டென்னிஸ் சங்கத்தின் இந்த அறிக்கை எல்லாவற்றையும் தெளிவுப்படுத்தும். சர்ச்சைகளுக் காகவே இதுபோன்ற செய்திகள் பெரிதாக்கப்படுகின்றன’’ என தெரிவித்துள்ளார்.