மனோஜ் குமார், விகாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மனோஜ் குமார், விகாஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி
Updated on
1 min read

அசர்பைஜானின் பகு நகரில் ஒலிம்பிக் குத்துச்சண்டைக்கான தகுதிச் சுற்று தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 64 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மனோஜ் குமார், தஜிகிஸ்தானின் ராக்கிமோவ் ஷக்வாகட்ஸ்கோனை எதிர்கொண்டார். இதில் மனோஜ் குமார் 3-0 என வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு அவர் தகுதிப் பெற்றார்.

இவர் வெற்றி பெற்ற சில மணி நேரத்தில் 75 கிலோ எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் 3-0 என்ற கணக்கில் கொரியாவின் லீ டாங்யனை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் அரையிறுதிக்கு முன்னேறிய விகாஸ் கிருஷ்ணன் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஏற்கெனவே 56 கிலோ எடை பிரிவில் உலக குத்துச்சண்டை போட்டி மூலம் ஷிவ தபா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளார். இதுவரை குத்துச்சண்டையில் 3 இந்திய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

49 கிலோ எடைப்பிரிவில் தேவேந்திர சிங், 81 கிலோ எடைப்பிரிவில் சுமித் சங்வான் ஆகியோரும் ஒலிம்பிக் போட்டி யில் பங்கேற்கும் வாய்ப்பை நெருங்கும் நிலையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in