டெல்லி ஓபன்: சனம் சிங், மைனேனிக்கு வைல்ட்கார்ட்

டெல்லி ஓபன்: சனம் சிங், மைனேனிக்கு வைல்ட்கார்ட்
Updated on
1 min read

டெல்லி ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் சனம் சிங், சாகேத் மைனேனி ஆகி யோருக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் ஆடவர் மற்றும் மகளிருக்காக நடத்தப்படும் மிகப்பெரிய டென்னிஸ் போட்டி யான டெல்லி ஓபன் வரும் 17-ம் தேதி டெல்லி ஆர்.கே.கன்னா மைதானத்தில் தொடங்குகிறது.

இந்தியாவின் முதல் நிலை வீரரான சோம்தேவ், 2-ம் நிலை வீரரான யூகி பாம்ப்ரி ஆகியோர் தரவரிசை அடிப்படையில் பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றுள்ளனர். சர்வதேச தரவரிசையில் 95-வது இடத்தில் உள்ளவரான கஜகஸ்தானின் அலெக்சாண்டர் நீடோவ்யெசோவ் டெல்லி ஓபன் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

மகளிர் பிரிவில் இந்தியாவின் முதல் நிலை வீராங்கனையான அங்கிதா ரெய்னா பிரதான சுற்றுக்கு நேரடித்தகுதி பெற்றுள்ளார். இந்தியாவின் நடாஷா பல்ஹாவுக்கு வைல்ட்கார்ட் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் பிரிவு போட்டித் தரவரிசையில் உக்ரைனின் ஓல்கா சாவ்சுக் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அவருடைய சர்வதேச தரவரிசை 180 ஆகும்.

போட்டிக்கான மொத்தப் பரிசுத்தொகை ரூ.77 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். இதில் ஆடவர் பிரிவுக்கு ரூ.62 லட்சமும், மகளிர் பிரிவுக்கு ரூ.15 லட்சமும் பரிசுத்தொகையாக அளிக்கப்படும். போட்டிக்கான தகுதிச்சுற்று வரும் 15-ம் தேதி தொடங்குகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in