Published : 24 Mar 2014 11:04 AM
Last Updated : 24 Mar 2014 11:04 AM

நியூஸிக்கு எதிராக 100-வது டெஸ்டில் ஆடுகிறார் கெயில்

அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் வரும் ஜூன் மாதம் நியூஸி லாந்துக்கு எதிராக தனது 100-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளார் என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நியூஸிலாந்து அணி வரும் ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டி, இரு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்பிறகு மேற்கிந்தியத் தீவு களும் வங்கதேசமும் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, ஒரு டி20 போட்டி ஆகியவற்றில் விளையாடுகின்றன.

மேற்கிந்தியத் தீவுகள்-நியூஸிலாந்து அணிகள் இடை யிலான முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 8-ம் தேதி ஜமைக்காவிலும், 2-வது போட்டி ஜூன் 16-ம் தேதி டிரினிடாட்டிலும், 3-வது போட்டி ஜூன் 26-ம் தேதி கயானாவிலும் தொடங்குகின்றன. இரு டி20 போட்டிகளும் டொமினிகாவில் நடைபெறுகின்றன.

இதுவரை 99 டெஸ்ட் போட்டி களில் விளையாடியிருக்கும் கிறிஸ் கெயிலுக்கு ஜமைக்கா போட்டி 100-வது போட்டியாகும். அவருடைய 100-வது போட்டியை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் தயாராகி வருகிறது. அது தொடர் பான மேலும் விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

வங்கதேசத்துடனான கிரிக்கெட் தொடர் ஒருநாள் போட்டியுடன் தொடங்குகிறது. முதல் இரு போட்டிகள் கிரனாடாவிலும், 3-வது போட்டி செயின்ட் கிட்ஸிலும் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டி செயின்ட் வின்சென்டிலும், 2-வது போட்டி செயின்ட் லூஸியாவிலும் நடைபெறுகின்றன என்று மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் குறிப்பிட்டுள்ளது.

2000-ல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான கெயில், இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6,933 ரன்கள் குவித்துள்ளார். அதில் 15 சதமும், 34 அரை சதங்களும் அடங்கும்.

மே.இ.தீவுகள்-நியூஸிலாந்து தொடர்

ஜூன் 8-12 - முதல் டெஸ்ட் - ஜமைக்கா

ஜூன் 16-20 - 2-வது டெஸ்ட் - டிரினிடாட்

ஜூன் 26-30 - 3-வது டெஸ்ட் - கயானா

ஜூலை 5 - முதல் டி20 - டொமினிகா

ஜூலை 6 - 2-வது டி20 - டொமினிகா



மே.இ.தீவுகள்-வங்கதேசம் தொடர்

ஆக. 20 - முதல் ஒருநாள் - கிரானாடா

ஆக.22 - 2-வது ஒருநள் - கிரானாடா

ஆக.25 - 3-வது ஒருநாள் - செயின்ட் கிட்ஸ்

ஆக.27 - டி20 போட்டி - செயின்ட் கிட்ஸ்

செப்.5-9 - முதல் டெஸ்ட் - செயின்ட் வின்சென்ட்

செப்.13-17 - 2-வது டெஸ்ட் - செயின்ட் லூஸியா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x