

சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் இளம் வீராங்கனை பி.வி. சிந்து 9-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவின் முன்னணி வீராங்கனை சாய்னா நெவால் 7-வது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.
18-வயது வீராங்கனையான சிந்து சமீபத்தில் அகில இந்திய சீனியர் போட்டியிலும், சையத் மோடி சர்வதேச பாட்மிண்டன் போட்டியிலும் சாம்பியன் பட்டம் வென்றார். இதுவே தரவரிசையில் அவரது முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணம்.
அடுத்ததாக சிந்துவும் சாய்னாவும் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளனர். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் சௌரவ் வர்மா 9 இடங்கள் முன்னேறி 41-வது இடத்தைப் பிடித்துள்ளார். காஷ்யப் தொடர்ந்து 18-வது இடத்தில் உள்ளார்.