

புஜாரா சாதனை படைத்த அதேவேளையில் கருண் நாயருக்கு சோதனை நேரமாக அமைந்தது. இங்கிலாந்துக்கு எதிராக சென்னை டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் விளாசிய கருண் நாயருக்கு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் டில் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதன் மூலம் முச்சதம் அடித்த அடுத்த போட்டியில் நீக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தார் கருண் நாயர். ஆனால் உடல் தகுதியுடன் இருக்கும் வீரர் ஒருவர் நீக்கப்படுவது இதுவே முதன்முறையாகவும் அமைந்தது.
இதற்கு முன்னர் இங்கிலாந் தின் ஆன்டி சன்தாம் 1925-ல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 325 ரன்கள் குவித்த போதும் அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டார். 40 வயதான அவர் காயத்தால் அவதிப்பட்டதால் முச்சதம் அடித்த ஆட்டமே அவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது.
இவரை தவிர இங்கிலாந்தின் சர் லென் ஹட்டன், பாகிஸ் தானின் இன்சமாம் உல்-ஹக் ஆகியோரும் முச்சதம் அடித்த அடுத்த ஆட்டத்தில் இடம் பெற வில்லை. ஆனால் இவர்கள் காயம் காரணமாக விலகியிருந் தனர். ஹட்டன், ஆஸ்திரேலியா வுக்கு எதிராக 364 ரன்களும், நியூஸிலாந்துக்கு எதிராக இன்சமாம் 329 ரன்களும் விளாசி யிருந்தனர்.