

இந்த சாம்பியன்ஸ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் சச்சினுக்காக சாம்பியன் ஆக வேண்டும் என்று மும்பை இண்டியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் லீக் போட்டியில் விளையாடுவதற்காக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூர் வந்துள்ள அவர் மேலும் கூறுகையில், "இதுதான் சச்சினின் கடைசி சாம்பியன்ஸ் லீக் போட்டி என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் அவருக்காக இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல விரும்புகிறோம்" என்றார்.