

ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டேவில்ஸ் அணியில் காயம் காரணமாக விளையாடாத தென் ஆப்ரிக்காவின் குயிண்டன் டி காக்குக்கு பதிலாக மேற்கிந்தியத் தீவுகளை சேர்ந்த ஆல்ரவுண்டரான மார்லன் சாமுவேல்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
நியூஸிலாந்து தொடரின் போது வலது ஆல்காட்டி விரலில் காயம் அடைந்ததால் குயிண்டன் டி காக், ஐபிஎல் தொடரில் இருந்து முழுமையாக விலகியிருந்தார். அவருக்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள சாமுவேல்ஸ் கடந்த 2012 மற்றும் 2013-ம் ஆண்டு புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
இந்த ஆண்டுக்கான ஏலத்தில் சாமுவேல்ஸின் அடிப்படை தொகை ரூ.1 கோடியாக இருந்த நிலையில் அவரை எந்த அணியுமே வாங்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் சாமுவேல்ஸ் இதுவரை 10 ஆட்டங்களில் விளையாடி 132 ரன் களும், 9 விக்கெட்களும் கைப்பற்றி உள்ளார்.