

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோமின் சுயசரிதையான “அன்பிரேக்கபிள்” அவரது சொந்த ஊரான இம்பாலில் நேற்று வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மேரி கோம், தனது சுயசரிதை மாநிலத்தில் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். இப்புத்தகம் வெளியிடப்பட்டதன் மூலம் தனது நீண்டநாள் ஆசை நிறைவேறியுள்ளது என்றார்.
விரைவிலேயே மீண்டும் குத்துச் சண்டை போட்டிகளில் களம் இறங்குவேன் என்றும் அவர் தெரிவித்தார். இதற்கு முன்பாக மும்பை, டெல்லி, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் மேரி கோமின் சுயசரிதை வெளியிடப்பட்டது. மேரி கோம் மகளிர் குத்துச் சண்டை போட்டியில் 5 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.