

மகளிர் உலக செஸ் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான ஹரிகா அரை இறுதிக்கு முன்னேறினார்.
ஈரானின் தெஹ்ரான் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஹரிகா துரோண வள்ளி தனது கால் இறுதியில் ஜார்ஜியாவின் நானா ஜாக் நைட்ஜை எதிர்த்து விளையாடி னார். இதில் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஹரிகா, அடுத்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தார்.
இருவரும் 1-1 என சம புள்ளி களை பெற்றதால் வெற்றியை தீர்மானிக்க டைபிரேக்கர் கடை பிடிக்கப்பட்டது. இதில் முதல் போட்டியில் வெள்ளை நிற காய்க ளுடன் விளையாடிய ஹரிகா, 53-வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய ஹரிகா 49-வது நகர்த்தலுக்கு பிறகு டிரா செய்தார். முடிவில் அவர் 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறினார். அரை இறுதியில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள சீனாவின் டான் ஜோங்யியை எதிர்த்து விளையாடுகிறார் ஹரிகா.
4-ம் நிலை வீராங்கனையான ஹரிகா, உலக செஸ் போட்டியில் அரை இறுதிக்கு முன்னேறுவது இது 3-வது முறையாகும்.