புஜாராவுக்கு ஐசிசி-யின் நம்பிக்கைக்குரிய வீரர் விருது

புஜாராவுக்கு ஐசிசி-யின் நம்பிக்கைக்குரிய வீரர் விருது
Updated on
1 min read

ஐசிசியின் 'ஆண்டின் நம்பிக்கைக்குரிய வீரர்' விருதுக்கு, இந்தியாவின் புஜாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

நடப்பு ஆண்டுக்கான ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

அதில், 'எமெர்ஜிங் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்' என்ற பிரிவில், ஐசிசி விருதுக்கு இந்தியாவின் புஜாரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். புஜாரா ஐசிசி விருது பெறுவது இதுவே முதல் முறையாகும்.

ஐசிசி விருதுகளின் விவரம்

ஆண்டின் சிறந்த வீரர் - மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)

ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் - மைக்கேல் கிளார்க் (ஆஸ்திரேலியா)

ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் - குமார் சங்ககாரா (இலங்கை)

ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை - சாரா டெய்லர் (இங்கிலாந்து)

ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை - சூஸி பேட்ஸ் (நியூஸிலாந்து)

ஆண்டின் நம்பிக்கைக்குரிய கிரிக்கெட் வீரர் - சதேஸ்வர் புஜாரா (இந்தியா)

ஆண்டின் சிறந்த டிவென்டி 20 பெர்ஃபார்மர் - உமர் குல் (பாகிஸ்தான்)

ஐசிசி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது - ஜெயவர்த்தனே (இலங்கை)

சிறந்த நடுவர் - ரிச்சர்ட் கேட்டில்பர்க்

ரசிகர்களின் தெரிவு விருது - தோனி (இந்தியா)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in