

இந்தியாவை சேர்ந்த பிரபல குத்துச்சண்டை வீராங்கனையான மேரிகோம் உலக குத்துச்சண்டை போட்டியில் ஐந்து முறை சாம்பி யன் பட்டம் வென்றவர் என்ற பெருமையை பெற்றவர். இவர் 51 கிலோ எடைப்பிரிவு போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
கடந்த மாதம் கஜகஜஸ்தானின் அஸ்டானாவில் நடைபெற்ற உலக குத்துச் சண்டை போட்டியில் மேரி கோம் பங்கேற்றார். இந்த தொடர் அவர் ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு கடைசி வாய்ப்பாக இருந்தது.
அரையிறுதி வரை முன்னேறி னால் ஒலிம்பிக் போட்டியில் விளை யாடும் வாய்ப்பை பெறலாம் என்ற இக்கட்டான நிலையில் 2-வது சுற்றிலேயே மேரிகோம் வெளியேறினார். இதன் மூலம் மேரிகோமின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது.
மேலும் 60 கிலோ, 75 கிலோ எடைப் பிரிவிலும் இந்தியா தரப்பில் இருந்து எந்த வீராங் கனையும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கான வாய்ப்பு முடிவடைந்ததாக கருதப்பட்ட நிலையில் 33 வயதான மேரிகோமுக்கு அதிர்ஷ்ட கதவு தட்டும் வாய்ப்பு எட்டியுள்ளது.
அதாவது வைல்டு கார்டு நுழைவு எனப்படும் சிறப்பு அனுமதி பெறும் முயற்சிகளில் இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு களமிறங்கியுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் தற்காலிக குழு மேற்கொண்டு வருகிறது. இந்த தற்காலிக குழுதான் தற்போது இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக தற்காலிக குழு தலைவர் கிஷன் நர்ஸி கூறும்போது, ‘‘மேரிகோம் சிறந்த வீராங்கனை. விளையாட்டில் அவரது ஓட்டுமொத்த பங்களிப்பின் அடிப்படையில், அவருக்காக நாங்கள் வைல்டு கார்டு அனுமதி கேட்க முடிவு செய்துள்ளோம். அவரது விண்ணப்பத்தை சர்வ தேச குத்துச்சண்டை சங்கம் பரிசீ லித்து முடிவு எடுக்கும்’’ என்றார்.
லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றுள்ள மேரி கோம், பல முறை ஆசிய சாம்பியன் பட்டங்களையும் வென் றுள்ளார். எனினும் ஒலிம்பிக் போட்டிக்கான இரு தகுதி சுற்று போட்டிகளிலும் அவர் தோல் வியை தழுவியதால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வைல்டு கார்டு அனுமதி கிடைத் தால் மட்டுமே அவரது ஒலிம்பிக் கனவு இம்முறை நனவாகும்.
ஒலிம்பிக் போட்டி வைல்டு கார்டுக்கு அனுமதி வழங்கும் உரிமை முத்தரப்பு ஆணையத் திடம் உள்ளது. இந்த அமைப்பு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நாட்டு தேசிய ஒலிம்பிக் சங்கங்களின் விண்ணப்பங்களை ஏற்று அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கும்.