டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார்

டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி நம்பர் 1 இடம்பிடித்தார்
Updated on
1 min read

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் அதிரடி வீரர் டிவில்லியர்ஸை பின்னுக்குத் தள்ளி இந்திய கேப்டன் விராட் கோலி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளார்.

பேட்டிங்கில் சொதப்பி வரும் டிவில்லியர்ஸ் 3-ம் இடத்துக்குத் தள்ளப்பட, விராட் கோலி 861 புள்ளிகளுடன் முதலிடத்திலும் வார்னர் 861 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளனர். ஷிகர் தவண் 746 புள்ளிகளுடன் 10-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

அதே போல் ஒருநாள் கிரிக்கெட் பந்து வீச்சு தரவரிசையில் தென் ஆப்பிரிக்க அணியின் ரபாடாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் முதலிடம் பிடித்துள்ளார்.

பேட்டிங்கில் ரோஹித் சர்மா, தோனி ஆகியோர் முறையே 13 மற்றும் 14-ம் இடத்தில் உள்ளனர்.

ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசை டாப் 10:

விராட் கோலி, வார்னர், டிவில்லியர்ஸ், ஜோ ரூட், கேன் வில்லியம்சன், குவிண்டன் டி காக், டுபிளெசி, பாபர் ஆசம், மார்டின் கப்தில், ஷிகர் தவண்.

பவுலிங் டாப் 10:

ஜோஷ் ஹேசில்வுட், இம்ரான் தாஹிர், மிட்செல் ஸ்டார்க், ரபாடா, சுனில் நரைன், டிரெண்ட் போல்ட், ரஷீத் கான், கிறிஸ் வோக்ஸ், லியாம் பிளங்கெட், மொகமது நபி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in