Published : 24 Jan 2017 10:12 AM
Last Updated : 24 Jan 2017 10:12 AM

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் அஸ்வின், ஜடேஜாவுக்கு ஓய்வு: அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூலுக்கு வாய்ப்பு

இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்க ளான அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வளிக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து குறுகிய வடிவிலான தொடர்களில் விளையாடி வரு கிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரை இங்கி லாந்து அணி 1-2 என இழந்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக மூன்று டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 26-ம் தேதி கான்பூரில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப் பட்டிருந்தது.

இதில் முதன்மை சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோருடன் யுவேந்திரா சாஹலும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில் டி 20 தொடரில் இருந்து அஸ்வின், ஜடேஜா ஆகியோருக்கு ஓய் வளிக்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழுவினர் நேற்று அறிவித்தனர்.

இவர்கள் இருவருக்கும் பதிலாக அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மிஸ்ரா இதுவரை எட்டு டி 20 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்கள் கைப்பற்றி உள்ளார். ஓவருக்கு 6.40 ரன்கள் விகிதம் வழங்கி உள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புளோரிடாவில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் பங்கேற்றார்.

ரசூல் சுழற்பந்து வீச்சுடன் பின்கள பேட்டிங்கிலும் கைகொடுக்க கூடிய வீரர். இதுவரை சர்வதேச போட்டிகளில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே ரசூல் விளையாடி உள்ளார். 2014-ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கேற்றபோது ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்திய அணிக்காக விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தார்.

சமீபத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத் தில் ரசூல் சிறப்பாக பந்து வீசி முன்னணி வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜாஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ் ஆகியோரது விக்கெட்களை கைப்பற்றியிருந் தார். மேலும் 2016-2017 ரஞ்சி கோப்பை சீசனில் 38 விக்கெட் களையும் வீழ்த்தி உள்ளார் ரசூல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x