Published : 30 Nov 2014 12:48 PM
Last Updated : 30 Nov 2014 12:48 PM

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: ஜெர்மனிக்கு கடும் சவால் அளிப்போம் - லலித் உபாத்யாய் நம்பிக்கை

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டியின் முதல் ஆட்டத்தில் எங்களை சந்திக்கும் ஜெர்மனி கடும் சவாலை சந்திக்க வேண்டியி ருக்கும் என இந்திய வீரர் லலித் உபாத்யாய் தெரிவித்துள்ளார்.

எப்ஐஎச் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி வரும் டிசம்பர் 6 முதல் 14 வரை ஒடிஸா தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெறவு ள்ளது. அதை முன்னிட்டு அங்குள்ள கலிங்கா மைதானத் தில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் 2-வது ஆடுகளத்தில் நேற்று முதல்முறையாக சர்தார் சிங் தலைமையிலான இந்திய அணி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டது. முதல் ஆட்டத்தில் ஜெர்மனியை சந்திக்கவுள்ள இந்திய அணி, அதில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளது.

இது தொடர்பாக இந்திய வீரர் லலித் உபாத்யாய் கூறுகையில், “சாம்பியன்ஸ் டிராபியில் சிறப்பாக ஆட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆரம்பம் முதலே நன்றாக ஆடி அணியின் வெற்றியில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளேன். களத்தில் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கும் இந்திய அணியில் நானும் இடம்பெற்றிருப்பதை பெருமையாகக் கருதுகிறேன். ஒவ்வொரு நாளும் எங்களின் திறமையை மெருகேற்றி கொண்டிருக்கிறோம். எங்களுக்கு எதிரான ஆட்டத்தில் ஜெர்மனி கடும் சவாலை சந்திக்க வேண்டி யிருக்கும் என உறுதியாகக் கூறுகிறேன்” என்றார்.

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி டென் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x