Last Updated : 17 Nov, 2014 08:31 PM

 

Published : 17 Nov 2014 08:31 PM
Last Updated : 17 Nov 2014 08:31 PM

பிரதமர் மோடியை ‘நமஸ்தே’ முகமனுடன் வரவேற்ற பிரட் லீ

ஆஸ்திரேலியாவிற்கு ஜி-20 மாநாட்டிற்குச் சென்றுள்ள பிரதார் நரேந்திர மோடியை ஆஸி.முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ, ‘நமஸ்தே’ என்று கூறி வரவேற்றுள்ளார்.

ஒலிம்பிக் பார்க்கில் ஆல்போன்ஸ் எரீனாவிற்கு சென்ற மோடியை பிரட் லீ இவ்வாறு வரவேற்றுள்ளார்.

"நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஆஸ்திரேலியாவுக்கு வரவேற்கிறேன், நமஸ்தே" என்று முகமன் கூறி வரவேற்றார் பிரட் லீ.

"முதன்முதலாக 1994-ஆம் ஆண்டு இந்தியா மீது நேசம் பிறந்தது, இந்தியா என் இதயத்திற்கு நெருக்கமானது, அதன் மக்கள் அன்பானவர்கள், அழகானவர்கள்” என்று மேலும் தெரிவித்தார் பிரட் லீ.

இந்த நிகழ்வுக்கு வருகை தந்த மோடிக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் மற்றும் ஆஸ்திரேலிய நடுவர் சைமன் டாஃபல் ஆகியோருடன் கை குலுக்கினார் மோடி.

சிட்னியில் இந்தியர்கள் மத்தியில் அவர் பேசும்போது, சிட்னி நகரம் அழகான நகரம் என்றும், ஆஸ்திரேலியா ஒரு அற்புதமான நாடு என்றும், இருநாடுகளும் கிரிக்கெட்டினால் பிணைந்துள்ளன, என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x