

ஓய்வு என்ற பெயரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் இருந்து கெவின் பீட்டர்சன் நீக்கப்பட்டுள்ளது குறித்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் கவலை தெரிவித்துள்ளார்.
தீவிர கிரிக்கெட் ரசிகரான கேமரூன், பிபிசி ரேடியோவுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியது:
பீட்டர்சனை அணியில் இருந்து நீக்கியது தவறான முடிவு. இது எனக்கு மட்டுமல்ல இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்குமே வருத்தம் அளிக்கும். அவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி பலமுறை வெற்றி பெற்றிருக்கிறது. நிச்சயமாக அவர் மிகச் சிறந்த வீரர் என்றார் கேமரூன்